லலித் வீரதுங்க அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ளார்

Written by vinni   // January 23, 2014   //

lalith virathungaஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க அமெரிக்காவிற்கு விஜயம் செய்ய உள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் தேசிய செயற்திட்டத்தை அமுல்படுத்தும் பொறுப்பு ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நல்லிணக்க முனைப்புக்கள் தொடர்பில் அமெரிக்கத் தலைவர்களுக்கும் ராஜதந்திரிகளுக்கும் விளக்கம் அளிக்கும் நோக்கில் அவர் இந்த விஜயத்தை மேற்கொள்ள உள்ளார்.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகள் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் அமெரிக்க அரசாங்கத் தரப்பினருக்கும், செனட் சபை உறுப்பினர்களுக்கும் விளக்கம் அளிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகள் நடைபெறவுள்ள நிலையில் இந்த விஜயம் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் நல்லிணக்க முனைப்புக்கள் உரிய முறையில் மேற்கொள்ளப்படவில்லை என அமெரிக்கா குற்றம் சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.