ஜெனீவா மனித உரிமை; கூட்டத் தொடருக்கு முன்னர் ஜனாதிபதி கூட்டமைப்பை சந்தித்து கலந்துரையாடுவார்

Written by vinni   // January 23, 2014   //

art.mahinda.rajapaksa.afp_.gi_ஜெனீவா மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடருக்கு முன்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தமிழ்த்தேசிய கூட்டமைப்பை சந்தித்து கலந்துரையாடுவார் என குளோபல்தமிழ்ச்செய்திகளின் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. ஜனாதிபதியின் செயலாளர் லலித்வீரதுங்க கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தனுடன் தொலைபேசியில் சந்திப்பு தொடர்பாக உரையாடியதாக அரசாங்க தகவல்கள் கூறின.

இனப்பிரச்சினை தீர்வுக்காக அமைக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம் வகித்தால் மாத்திரமே தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் பேச்சு நடத்தப்படும் என அரசாங்கம் கூறிய நிலையில் தற்போது ஜெனீவா மாநாட்டை முன்னிட்டு சந்திப்பதற்கான எற்பாடுகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.