அமெரிக்கா தூதுவருடன் சரத் பொன்சேகா இரகசிய சந்திப்பு

Written by vinni   // January 23, 2014   //

Fonseka speaks to reporters during a news conference in Colomboமுன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகாவுக்கும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவருக்கும் இடையில் இரகசியமான சந்திபொன்று நடைபெற்றுள்ளதாக கொழும்பில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க தூதுவர் மைக்கேல் ஜே. சிசன் உடனான இந்த சந்திப்பு கொழும்பில் இரகசியமான இடம் ஒன்றில் மூடப்பட்ட அறையில் இடம்பெற்றதாக தெரியவருகிறது.

இந்த இரகசிய சந்திப்பில் ஜெனிவா விடயங்கள் பற்றியே பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவில் அமெரிக்கா இலங்கைக்கு எதிராக கொண்டு வரவுள்ள யோசனை தொடர்பில் தேவையான தகவல்களை வழங்குவதாக பொன்சேகா இதன் போது இணக்கம் வெளியிட்டுள்ளார்.

அத்துடன் அமெரிக்காவின் யோசனைக்கு தன்னாலான உதவிகளை வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளதாக பேசப்படுகிறது.

இலங்கைக்கு எதிரான யோசனைக்கு பொன்சேகாவிடம் இருந்து பெறும் உதவிகளுக்காக, அமெரிக்கா எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலுக்கான செலவுகளை பொறுபேற்க உள்ளதாகவும் கொழும்பு தகவல்கள் மேலும் தெரிவித்தன.

இலங்கையில் இறுதிக்கட்டப் போர் நடைபெற்ற போது இலங்கை இராணுவம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்படுகிறது.

இந்த நிலையில், போர் நடைபெற்ற போது இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவுக்கு இறுதிக்கட்டத்தில் நடந்த சம்பவங்கள் குறித்த தகவல்களை அமெரிக்காவிடம் தெரியப்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.


Similar posts

Comments are closed.