நடிகர்கள் மற்றும் நடிகைகள் தேர்தலில் படப்பிடிப்புகள் ரத்து!- நாமல் ராஜபக்ச

Written by vinni   // January 23, 2014   //

namalஎதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட இலங்கையில் உள்ள நடிகர்கள் மற்றும் நடிகைகள் பெருமளவில் வேட்புமனுக்களை கோரி விண்ணப்பித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் அவர் இதனை குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் உள்ள நடிகர், நடிகைகள் தேர்தலில் போட்டியிட முண்டியடித்து வருகின்றனர். இதனால் சகல படப்பிடிப்புகளுக்கு ரத்துச் செய்யப்பட்டுள்ளன.

நடிகர்கள் தேர்தலில் போட்டியிட உள்ளனர். வேட்புமனு சபைக்கு வந்து வரிசையில் நின்று வேட்புமனுக்களை கோரி விண்ணப்பித்துள்ளனர்.

இவர்கள் இப்போது தொலைக்காட்சி நாடகங்களில் நடிப்பதில்லை. அனைத்து படப்பிடிப்புகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. சகலரும் தற்பொழுது தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


Similar posts

Comments are closed.