தொடர்ச்சியாக டிவி பார்த்து கின்னஸ் சாதனை

Written by vinni   // January 23, 2014   //

tv_watching_record_005அமெரிக்காவில் தொடர்சியாக தொலைக்காடசி பார்த்து கின்னஸ் சாதனை நிலை நாட்டப்பட்டுள்ளது.

அமெரிக்க நெவாடாவின் லாஸ்வேகாஸ் மாநாட்டு மையத்தில் டான் ஜோர்டன், ஸ்பென்சர் லார்சன், கிரிஸ் லாப்லின் என்ற மூன்று பேர் கின்னஸ் சாதனைக்காக நீண்ட நாட்கள் தொடர்ந்து டிவி பார்க்கும் போட்டியில் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியானது நேரடி தொலைக்காட்சிகளாகாவும் ஒளிபரப்பப்பட்டது.

கின்னஸ் விதி முறைகளின் படி அவர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ஐந்து நிமிடங்கள் என ஓய்வு அளிக்கப்பட்டது. இதில் அவர்கள் பாத்ரூம் செல்வதற்காக அந்த நேரத்தை எடுத்துக்கொண்டனர்.

டிவி நிகழ்ச்சிகளை பார்க்கிறபோது சேனல்களை மாற்றிக்கொள்ளவும், சாப்பிட மற்றும் குளிர்பானங்கள் அருந்த மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்கள் மூன்று பேரும் தொடர்ந்து 5 நாட்களில் 87 மணி நேரம் தூங்காமல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்தனர். இந்த சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

ஏற்கனவே அமெரிக்காவை சேர்ந்த கேரின் ஷ்ரீவ்ஸ் மற்றும் ஜெரேமியா பிராங்கோ என்ற இருவர் தொடர்ந்து 86 மணிநேரம் 37 நிமிடங்கள் தொலைக்காட்சி பார்த்ததே கின்னஸ் சாதனையாக இருந்தது.


Similar posts

Comments are closed.