ஆபாச டாட்டூகளுக்கு தடை விதித்த ஜேர்மனி

Written by vinni   // January 23, 2014   //

german_army_002ஜேர்மன் இராணுவத்தில் பணிபுரியும் வீரர்கள் ஆபாச டாட்டூ மற்றும் நீண்ட தாடி வைக்க கூடாது என்பது போன்ற தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

நாட்டின் பிரதிநிதிகளான ஜேர்மன் ராணுவ வீரர்கள் கடைப்பிடிப்பதற்கென சில விதிகளை ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதில், பெண்ணின் நிர்வாண டாட்டூகளோ, அரசியலை தவறாக சுட்டிக்காட்டும் வகையில் பாரபட்சமான டாட்டூகளையோ உடலின் கழுத்து, கை மற்றும் முகம் போன்ற இடங்களில் பச்சைக்குத்தி கொள்ள கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காது மற்றும் வாய் பகுதிகளில் துளையிட்டு கடுக்கண் அணிதல், நகம் வளர்த்தல் மற்றும் நகையணிதல் போன்ற அனைத்து செயலுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த நிபந்தனைகளுக்கு இராணுவ வீரர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Similar posts

Comments are closed.