ஒலிம்பிக்கில் கபடி விளையாட்டும் விரைவில் இடம்பெறும்: சர்வதேச கபடி சம்மேளன தலைவர் நம்பிக்கை

Written by vinni   // January 22, 2014   //

02310c1d-3da1-48f7-9c4a-58a280644a32_S_secvpfபீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள பாடலிபுத்திரா விளையாட்டு அரங்கில், 61-வது தேசிய சீனியர் கபடி சாம்பியன்ஷிப் போட்டிகள் இன்று தொடங்கின. தொடர்ந்து 4 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியின் முதல் நாளான இன்று கர்நாடக கபடி அணியுடன் மோதிய விதர்பா அணி, 32-14 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.

பெண்கள் பிரிவினருக்கான போட்டியில் 17-29 என்ற புள்ளி கணக்கில் அரியானா அணியிடம் விதர்பா பெண்கள் அணி தோல்வியடைந்தது.

போட்டி நடைபெறும் தங்களது சொந்த மண்ணான பாட்னா விளையாட்டு அரங்கில் உத்தரபிரதேச அணிக்கு எதிராக கடுமையாகப் போராடிய பீகார் அணி, 33-35 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியடைந்தது. இதனால் அரங்கில் இருந்த பார்வையாளர்கள் எழுந்து நின்று ஆவேசமாக கூச்சலிட்டனர்.

இன்றைய துவக்க விழாவில் சர்வதேச அமெச்சூர் கபடி சம்மேளனத்தின் தலைவர் ஜனார்த்தன் சிங் கெலாட் பேசுகையில், “ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் கபடியையும் சேர்க்க நாங்கள் தீவிரமாக முயற்சி செய்து வருகிறோம். வெகுவிரைவில் ஒலிம்பிக் போட்டியில் கபடி விளையாட்டு இடம்பெறும் என உறுதியாக நம்புகிறோம்.” என்று குறிப்பிட்டார்.


Similar posts

Comments are closed.