ஆஸ்திரேலிய ஓபனில் நடால்-பெடரர் அரையிறுதிக்கு தகுதி: பயஸ்-ஸ்டெபானிக் ஜோடி காலிறுதியில் தோல்வி

Written by vinni   // January 22, 2014   //

3831869b-da96-4660-94cd-52ca07335e94_S_secvpfமெல்போர்னில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்-செக் குடியரசின் ஸ்டெபானிக் ஜோடி வெளியேறியது.

ஆடவர் இரட்டையர் பிரிவில் இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில், இந்த ஜோடி, பிரான்சின் 13-ம் தரநிலை ஜோடியான மைக்கேல் லோத்ரா-நிக்கோலஸ் மகட் ஜோடியிடம் 2-6, 6-7 என்ற நேர்செட்களில் தோல்வியடைந்தது.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால், ஸ்லோவேகிய வீராங்கனை டோமினிகா சிபுல்கோவா ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறினர்.

காலிறுதி ஆட்டத்தில், ரபேல் நடால், பல்கேரியாவின் கிரிகோர் திமித்ரோவை 3-6, 7-6, 7-6, 6-2 என்ற செட் கணக்கில் போராடி வென்றார். மற்றொரு காலிறுதியில் ரோஜர் பெடரர் 6-3, 6-4, 6-7, 6-3 என்ற செட்கணக்கில் ஆண்டி முர்ரேவை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் டோமினிகா சிபுல்கோவா, ரோமேனியாவின் சிமோனா ஹாலெப்பை 6-3, 6-0 என்ற நேர் செட்களில் எளிதாக வென்றார்.


Similar posts

Comments are closed.