மன்னார்,திருக்கேதீஸ்வரம் புதைகுழி இன்றும் தோண்டப்பட்டது!- எலும்புத்துண்டுகள் மீட்பு

Written by vinni   // January 22, 2014   //

177255614mannar-puthaikuli1மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் உள்ள மனித புதைகுழி மீண்டும் இன்று காலை 8.30 மணி தொடக்கம் மதியம் 2 மணிவரை மன்னார் நீதவான் முன்னிலையில் 10வது தடவையாக தோண்டப்பட்டது.

இதுவரை 40 மனித எலும்புக்கூடுகள் முழுமையாகவும், துண்டுகளாகவும் மீட்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் மன்னார் நீதவானின் உத்தரவிற்கமைவாக நேற்று திங்கட்கிழமை மற்றும் இன்று செவ்வாய்க்கிழமை குறித்த பகுதியில் உள்ள வீதி உடைக்கப்பட்டு மனித எலும்புக்கூடுகள் மீட்கும் பணிகள் இடம்பெற்றன.

இதன் போது இன்று செவ்வாய்க்கிழமை புதிதாக தோண்டப்பட்ட பகுதியில் மனித எலும்புத்துண்டுகள் சில கண்டு பிடிக்கப்பட்டன.

எனினும் முழுமையான மனித எலும்புக்கூடுகள் எவையும் கண்டு பிடிக்கப்படவில்லை.

இதேவேளை நாளை மீண்டும் மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் குறித்த மனித புதைகுழி தோண்டப்படவுள்ளது.

மனித புதைகுழி தொடர்பாக அனுராதபுர சட்ட வைத்திய நிபுணர் டி.எல்.வைத்தியரெட்ன கருத்து தெரிவிக்கையில்,

மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்டு வரும் மனித எலும்புக்கூடுகள் அதன் மரணம் சம்பவித்த விதத்தினை அறிந்து கொள்ள நீண்ட நாட்கள் எடுக்கும்.

குறித்த மனித புதைகுழியில் இருந்து தொடர்சசியாக மனித எழும்புக்கூடுகள் மாத்திரமே மீட்கப்பட்டு வருகின்றன.

பாரியளவிலான தடயப் பொருட்கள் எவையும் இதுவரை மீட்கப்படவில்லை.

குறித்த மனித புதைகுழியின் எல்லை எதுவரை உள்ளது என்பதனை கண்டுபிடிக்க முடியாத நிலையில் உள்ளோம் என்றார்.


Similar posts

Comments are closed.