ஒன்லைன் டேட்டிங்கால் நேர்ந்த விபரீதம்

Written by vinni   // January 22, 2014   //

chating_001.w245ஒன்லைன் டேட்டிங் மூலம் அறிமுகமான பெண்ணை சந்திக்க வந்த நபர், கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜேர்மனை சேர்ந்த நபர் ஒருவர் தான் ஒன்லைனில் அரட்டை அடித்த பெண்ணை சந்திப்பதற்காக கொலம்பியா வந்துள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக கடத்தல் கும்பலால் கடத்தப்பட்டு, கடந்த 19ம் திகதி மயங்கிய நிலையில் காலி மாகாண பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளார்.

இதுபற்றி குறித்த நபர் கூறுகையில், ஒன்லைனில் சந்தித்த பெண்ணை நேரில் காண்பதற்காக கொலம்பியா வந்தேன். அப்போது இந்த பெண்ணின் வளர்ப்பு மகள் மற்றும் இருவர் எனக்கு ஏதோ குளிர்பானம் ஒன்றை கலந்து கொடுத்தனர், அதன்பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை, மயங்கிய நிலையில் பொலிசார் என்னை மீட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் பற்றி பொலிசார் கூறுகையில், இக்கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டதாக 43 மற்றும் 52 வயது மதிக்கத்தக்க நபர்களும், வளர்ப்பு மகளும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் இதுபோன்ற கடத்தல் சம்பவங்கள் கொலம்பியாவில் சர்வசாதாரணமாக நடக்கின்றன என்றும் தெரிவித்துள்ளனர்.


Similar posts

Comments are closed.