ஆண்களை நம்பாதீங்க! ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்

Written by vinni   // January 22, 2014   //

affair_002பிரான்சில் சமீபத்தில் வெளியான ஆய்வின் முடிவுகள் அதிர்ச்சி அளிக்க கூடியதாக உள்ளது.

பிரான்சை சேர்ந்த IFOP என்ற ஆராய்ச்சி மையம், ஆண்- பெண்களுக்கு இடையேயான உறவுகள் குறித்து ஆய்வு நடத்தியது.

இதில், 55 சதவிகித ஆண்களும், மூன்றில் ஒரு பங்கு பெண்களும் தங்களது துணைக்கு துரோகம் செய்கின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து ஆய்வை நடத்திய பிராகோஸ் கிராஸ்(François Kraus) என்ற ஆய்வாளர் கூறுகையில், இன்றைய காலகட்டத்தில் வேலை பார்க்கும் இடங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் ஆண்- பெண் இருவரும் அரட்டை அடித்து கொள்கின்றனர்.

இதனால் அவர்களுக்கு இடையேயான உறவு நெருக்கமடைகின்றது. இதில் 35 சதவிகிதமானவர்கள் தங்களது துணைக்கு தெரியாமல் கள்ளத் தொடர்பை வளர்த்து வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் தான் பிரான்ஸ் ஜனாதிபதி ஒலாந்துக்கும், பிரபல நடிகை ஜீலி கேயட்டுக்கும் இடையேயான உறவு குறித்து தகவல்கள் அம்பலமானது குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.