அமெரிக்காவில் மீண்டும் பனிப்புயல்: 2 அடி உயரத்திற்கு பனிப்படர்வு

Written by vinni   // January 22, 2014   //

sotrm_001அமெரிக்காவில் மீண்டும் கடும் குளிருடன் பனிப்புயல் தாக்கி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. அங்கு சுமார் 2 அடி உயரத்திற்கு பனி கொட்டிக்கிடக்கிறது. போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.

இன்னும் இரு நாட்களில் கடும் பனிப்பொழிவு ஏற்பட எச்சரிக்கப்பட்டுள்ளதால், குளிரானது மைனஸ் 10 முதல்-25 டிகிரி செல்சியசிற்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடுமையான பனிப்பொழிவிற்கு முன்பே, வாஷிங்கடன் உள்ளிட்ட கிழக்கு பகுதி மாகாணங்களின் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மேற்கு விர்ஜினியா முதல் போஸ்டன் வரை உள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

2,900 விமானப்போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

வடதுருவ சுழற்சி காரணமாக கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு அமெரிக்காவின் வடக்கு மற்றும் கிழக்குபகுதிகள் வெகுவாக பாதிக்கப்பட்டன. இதில் வரலாறு காணாத அளவிற்கு பெரும்பான்மையான இடங்களில் குளிரானது மைனஸ் 20 டிகிரிக்கு மேல் சென்றது குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.