இலங்கைக்கு ரோந்துக் கப்பல்களே வழங்கவுள்ளோம்: இந்தியா

Written by vinni   // January 22, 2014   //

safe_imageஇலங்கைக்கு போர்க்கப்பல் அல்ல. ரோந்து கப்பல்களையே வழங்கவுள்ளதாக இந்திய மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சென்னை மேல் நீதிமன்றத்தில் இது தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கம், சத்திய கடதாசியை சமர்ப்பித்துள்ளது.

இந்திய மத்திய அரசாங்கத்தின் சார்பில் வெளியுறவு அமைச்சின் உதவிசெயலாளர் ஜோசி இந்த சத்திய கடதாசியை சமர்ப்பித்துள்ளார்.

இந்த கப்பல்கள் வழங்கப்பட்ட பின்னர் அவற்றை இந்திய கடற்பகுதிக்குள் செலுத்துவதில்லை என்று இலங்கை கடற்படையும் உறுதியளித்துள்ளதாக ஜோசி குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது இந்திய கடற்படையினரும் இந்திய மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவர் என்று ஜோசி சுட்டிக்காட்டியுள்ளார்.


Similar posts

Comments are closed.