பொதுநலவாய அமர்வுகளின் போது உரிமை மீறல்கள் இடம்பெற்றன

Written by vinni   // January 22, 2014   //

commanகடந்த நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளின் போது உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக பிரித்தானியா குற்றம் சுமத்தியுள்ளது. அமர்வுகள் நடைபெற்ற காலத்திலும் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாகத் தெரிவித்துள்ளது.

பிரித்தானிய வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள மனித உரிமை மற்றும் ஜனநாயகம் தொடர்பிலான அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வு நடைபெற்ற காலத்திலும் இலங்கையில் மனித உரிமை நிலைமைகள் மேம்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளது.

யுத்த காலத்தில் கடத்தப்பட்ட மற்றும் காணாமல் போனோரின் குடும்ப உறுப்பினர்கள் கொழும்பிற்கு பயணம் செய்ய பாதுகாப்புத் தரப்பினர் அனுமதியளிக்கவில்லை என தெரிவித்துள்ளது. அமர்வுகள் நடைபெற்ற காலத்தில் போராட்டங்கள் பேரணிகள் நடத்தப்படுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது எனக் குறிப்பிட்டுள்ளது.


Similar posts

Comments are closed.