முள்ளிவாய்க்காலை பார்க்கையில் அங்கு ஒரு உக்கிரமான போர் நடைபெற்றுள்ளதை உணரலாம்! ராதிகா சிற்சபேசன்

Written by vinni   // January 22, 2014   //

rathiவன்னி இறுதிப்போர் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பகுதியை பார்வையிட்ட பொழுது அங்கு ஒரு உக்கிரமான போர் நடைபெற்றுள்ளது என்பது தெட்டத்தெளிவாக உணரக்கூடியதாகவுள்ளது என அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த கனேடிய எம்.பி ராதிகா சிற்சபேசன் தெவித்தார்.

தமிழக ஊடகமான புதியதலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அக்னிபரீட்சை நிகழ்ச்சிக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து தெரிவிக்கையில்,

இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் ஜனநாயகம் என்பது துளியளவும் கிடையாது. அங்குள்ள மக்கள் ஒரு இராணுவ அடக்குமுறையின் கீழேயே வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.

வடக்கு கிழக்கு மாகாண சபை தேர்தல் சர்வதேச அழுத்தங்களின் காரணமாகவே நடைபெற்றது என தெரியவருகின்றது. எனினும் அங்குள்ள மக்கள் ஒரு தெளிவான முடிவையே தேர்தலின் மூலம் தெரிவித்துள்ளனர்.

வடக்கு கிழக்கு மாகாண சபையில் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட முதலமைச்சரோ, உறுப்பினர்களோ அங்கு சக்தியற்றவர்களாகவே உள்ளனர். ஏனெனில் வட மாகாண சபையில் சகல அதிகாரங்களும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆளுநருக்கே உள்ளது தெட்டத் தெளிவாக புலப்படுகின்றது.

வட பகுதியில் தற்போது முகாம்களிலுள்ள தமிழ் மக்கள் சாப்பிட கூட உணவற்ற நிலையிலேயே தமது வாழ்க்கையை கழித்துக்கொண்டிருப்பதை நான் நேரில் கண்டு வேதனைப்பட்டேன்.

அங்குள்ள மக்களின் தேவைகளை அறிந்து அவர்களின் தேவைகளை உடனே நிவர்த்தி செய்வதே தற்போது புலம்பெயர்நாடுகளில் வசிக்கும் மக்களின் கடமை என நான் நினைக்கின்றேன் என மேலும் தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.