அதிக சொக்லேட் சாப்பிட்டால் நீரிழிவு நோய் வராது! நிபுணர்கள் தகவல்

Written by vinni   // January 22, 2014   //

diabetes_002அதிக சொக்லேட் சாப்பிட்டாலும், சிவப்பு ஒயின் குடித்தாலும் நீரிழிவு நோய் தாக்காது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

நீரிழிவு நோய் குறித்து கிழக்கு ஏஞ்சலியா பல்கலைகழகம் மற்றும் லண்டன் கிங்ஸ் கல்லூரியை சேர்ந்த நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

சுமார் 2 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், சொக்லேட் மற்றும் சிவப்பு ஒயின் குடிப்பவர்களுக்கு 2வது வகை நீரிழிவு நோய் தாக்குதல் குறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சொக்லேட் மற்றும் சிவப்பு ஒயினில் உள்ள ஆந்தோசியானின்ஸ் உள்ளிட்ட சில மூலக்கூறுகள் இன்சுலினை போதிய அளவு சுரக்க செய்து ரத்தத்தில் குளுகோஸ் அளவை சீராக வைக்க உதவுகிறது, அதனால்தான் நீரிழிவு நோய் தாக்குதல் குறைவாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம் மூலக்கூறுகள் காபி கொட்டைகள், சிவப்பு திராட்சை, ஒயின் மற்றும் சிவப்பு அல்லது நீல நிற பழங்கள் மற்றும் காய்கறிகளில் அதிகம் உள்ளது. அவற்றை சாப்பிட்டாலும் நீரிழிவு நோய் தாக்காது என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.


Similar posts

Comments are closed.