பாகிஸ்தானில் ராணுவ விமான தாக்குதல்: 25 தீவிரவாதிகள் சாவு

Written by vinni   // January 21, 2014   //

images (3)பாகிஸ்தானின் வடக்கு மாகாணமான வஜிரிஸ்தானில் பாதுகாப்பு படை விமானங்கள் நடத்திய தாக்குதலில் 25 தலிபான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயம் அடைந்தனர்.

உளவுத்துறை கொடுத்த உறுதியான ரகசிய தகவலின் அடிப்படையில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தின் மீது ராணுவத்தினர் நேற்று இரவு விமான தாக்குதல் நடத்தினர். இதில் கொல்லப்பட்ட 25 தீவிரவாதிகளும், பசார் மற்றும் ஞாயிற்றுக்கிழமை பன்னு பகுதியில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்புள்ளவர்கள் என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2007ஆம் ஆண்டில் தலிபான் தலைவர்களுடன் ஏற்பட்ட உடன்படிக்கைக்குப் பிறகு தீவிரவாதிகள் மீது விமான தாக்குதல் நடத்துவது இதுவே முதல் முறையாகும்.


Similar posts

Comments are closed.