அமெரிக்காவில் இந்திய-அமெரிக்க மாணவர் சடலமாக மீட்பு

Written by vinni   // January 21, 2014   //

images (2)அமெரிக்காவில் 7 வருடங்களுக்கு முன்பு பெற்றோரை பறிகொடுத்த இந்திய-அமெரிக்க மாணவர் புல்கித் சிங்(20), தற்போது அவரது பள்ளி வளாகத்திலேயே சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பிலடெல்பியா காவல்துறையினர் கூறுகையில், “இந்த மரணத்தில் குற்ற முகாந்திரம் எதுவுமில்லை. இதுபற்றி விசாரித்து வருகிறோம்” என்றனர்.

புல்கித்தின் சித்தப்பா ஜோகிந்தர் சிங் கூறுகையில், “புல்கித் எங்கள் குடும்பத்தின் நட்சத்திரம். அவன் மிகுந்த தொலைநோக்கு பார்வையுடையவன், சிந்திக்ககூடியவன்” என்று குறிப்பிட்டார்.

கடந்த 2007ஆம் ஆண்டு புல்கித்தும் அவரது சகோதரரும் பள்ளியில் இருந்து வீடு திரும்புகையில், அவரது பெற்றோர்கள் ஜஸ்பால் (46), கீதா (38) ஆகியோர் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து கிடந்தனர். தற்போது புல்கித்தும் அதேபோன்று இறந்திருப்பது அவரது குடும்பத்தினருக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Similar posts

Comments are closed.