இலங்கை அரசு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட தரப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் போதியளவு முனைப்பு காட்டப்படவில்லை – மனித உரிமை கண்காணிப்பகம்

Written by vinni   // January 21, 2014   //

human-78rwகுற்றச் செயல்களுக்கு தண்டனை விதிப்பதில் இலங்கை அரசாங்கம் உரிய முனைப்ப காட்டவில்லை என மனித உரிமை கண்காணிப்பகம் அறிவித்துள்ளது.

2013ம் ஆண்டில் பாரியளவிலான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட தரப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் போதியளவு முனைப்பு காட்டப்படவில்லை என தெரிவித்துள்ளது.

மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் தொடர்ந்தும் அடக்குமுறைகளையும் அச்சுறுத்தல்களையும் எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் அமைப்பும், சர்வதேசமும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் கேள்வி எழுப்பி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தம் இடம்பெற்ற காலத்திலான குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிப்பதில் அரசாங்கம் முனைப்பு காட்டி வருவதாக அரசாங்கம் அறிவித்த போதிலும், உலகம் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் தொடர்பிலான பெறுபேறுகளுக்காக காத்திருப்பதாக மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்தியப் பணிப்பாளர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.

மெய்யான வகையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டுமாயின் சர்வதேச சுயாதீன விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

2014ம் ஆண்டுக்கான மனித உரிமை கண்காணிப்பகத்தின் அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளை இலக்கு வைத்து இலங்கை அரசாங்கம் சில நடவடிக்கைகளை எடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளின் அடிப்படையில் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

2006ம் ஆண்டு திருகோணமலை மாணவர் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்தல் உள்ளிட்ட சில அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

அரசாங்கத்தை விமர்சனம் செய்யும் இலங்கையர்கள் பல்வேறு வழிகளில் தண்டிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சட்டம் ஒழுங்கு ஆபாயத்தை எதிர்நோக்கி வருவதாகவும் ஜனநாயகத்தை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


Similar posts

Comments are closed.