போப் ஆண்டவர் – ஒபாமா மார்ச் 27-ம் தேதி வாடிகனில் சந்திப்பு

Written by vinni   // January 21, 2014   //

obama_001.w245உலகில் நிலவும் ஏழ்மை மற்றும் ஏற்றத்தாழ்வுகளை சமாளிப்பது குறித்து அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, போப் பிரான்சிசை சந்தித்து பேசவுள்ளார்.

வரும் மார்ச் மாதம் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஒபாமா மார்ச் 27-ம் தேதி போப்பை சந்திக்கிறார் என்று அமெரிக்க அதிபரின் செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார்.

இந்த சத்திப்பில் உலகில் நிலவும் ஏழ்மைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், மக்களிடையே வளர்ந்துவரும் ஏற்றத்தாழ்வுகளை போக்குவது குறித்தும் இருவரும் விவாதிக்கின்றனர். அப்போது இத்தாலி அதிபர் மற்றும் பிரதமரை ரோமில் சந்திக்கவுள்ளார்.

மார்ச் 24-ம் தேதியே ஐரோப்பா செல்லும் ஒபாமா, 24, 25-ம் தேதிகளில் நெதர்லாந்தில் நடைபெறும் அணுசக்தி பாதுகாப்பு உச்சிமாநாட்டில் கலந்துகொள்கிறார்.

பின்னர் 26-ம் தேதி பெல்ஜியத்தில் நடைபெறும் ஐரோப்பா மற்றும் அமெரிக்க உச்சிமாநாட்டில் கலந்துகொள்கிறார். அங்கு பெல்ஜியம் தலைவர்கள் மற்றும் நேட்டோ பொதுச் செயலாளரையும் சந்தித்து ஒபாமா பேசுகிறார்.


Similar posts

Comments are closed.