ஐக்கிய அரபு இராச்சியம் இலங்கைக்கு உதவத் தயார்

Written by vinni   // January 21, 2014   //

downloadராக உள்ளது என அந்நாட்டின் பிரதமரும் உதவித் தலைவரும் டுபாய் ஆட்சியாளருமான ஷேக் முஹமட் பின் ராஷித் அல் மக்தூம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் உறுதியளித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் பிரதமரிற்கும் இடையிலான பேச்சுவார்த்தையொன்று இன்று மாலை இடம்பெற்றுள்ளது.

இதன்போதே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது. இலங்கையின் நிலைமைகளையும் கள யதார்த்தங்களையும் தாம் நன்றாகப் புரிந்துகொண்டுள்ளதாக ஷேக் முஹமட் ஜனாதிபதியிடம் தெரிவித்தார்.

இலங்கையில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் முதலீடுகளை அதிகரிப்பதற்கும் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கும் Nஷக் முஹமட் தனது விருப்பத்தை தெரிவித்தார்.

ஜனாதிபதி ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தை பாராட்டிய பிரதமர் ஷேக் முஹமட், பல வருடங்களுக்குப் பின்னர் இலங்கையில் சமாதானம் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், இலங்கையில் தற்போது முதலீட்டுக்கான சிறந்த சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு ஷேக் முஹமட் அவர்களுக்கு ஜனாதிபதி ராஜபக்ஷ விடுத்த அழைப்பை அவர் ஏற்றுக்கொண்டார்.  பேச்சுவார்த்தையின் நிறைவில் டுபாய் ஆட்சியாளர் எழுதிய ஒரு கவிதை நூலை ஜனாதிபதிக்கு அன்பளிப்பாக வழங்கினார்.

வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் டி வாஸ் குணவர்தனவும் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டார்.


Similar posts

Comments are closed.