வேற்று கிரக வாசியின் விண்கலம் சந்திரனில்

Written by vinni   // January 20, 2014   //

UFO (1)சந்திரனில் வேற்று கிரக வாசியின் விண்கலம் இருப்பதற்கான அறிகுறி உள்ளது. வேற்று கிரகவாசிகள் பறக்கும் தட்டு போன்றவற்றின் உதவியால் பூமியில் நடமாடுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் அவை இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

இந்த நிலையில் பூமியின் துணை கோளான சந்திரனில் வேற்று கிரகவாசி நடமாட்டம் இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அதற்கு உதாரணமாக அவர்கள் பயன்படுத்தும் வினோதமான விண்கலம் அங்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அந்த விண்கலம் முக்கோண வடிவில் ஆப்பு போன்ற வடிவில் உள்ளது. இதை கூகுல் வரை படம் காட்டுவதாக ஆராய்ச்சியாளர் வாவ்போர்ரீல் கூறியுள்ளார்.

இந்த விண்கலம் வழக்கத்து மாறான வடிவில் தனிச் சிறப்பம்சம் வாய்ந்ததாக உள்ளது. எனவே இது வேற்று கிரகவாசியின் விண்கலம் தான் என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும் என யூ டியூப்பில் வீடியோ மூலம் விளக்கியுள்ளார்.

மேலும் இந்த விண்கலம் பூமியில் தயாரிக்கப்பட்டுள்ள விமானத்தை விட மிகப் பெரியது என்றும், அதி நவீன தொழில் நுட்பம் வாய்ந்தது என்றும் தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.