பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு எதிராக உலகம் திரள வேண்டும்: கனடிய மனிதவுரிமை மையம் கண்டனம்

Written by vinni   // January 20, 2014   //

canadaஆப்கானிஸ்தானில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் இரண்டு கனேடியர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக கனடிய வெளிவிவகார அமைச்சர் வெளியிட்ட அறிக்கைக்கு கனடிய மனிதவுரிமை மையம் ஆதரவு தெரிவித்துள்ளது.
கனடிய அரசு மற்றும் கனடிய வெளிவிவகார அமைச்சர் ஆகியோர் இரு கனடியர்கள் காபூலில் அமைந்துள்ள உணவுவிடுதியில் இடம்பெற்ற தாக்குதலில் கொல்லப்பட்ட விடயம் தொடர்பாக தெரிவித்த கருத்துக்களை ஆதரித்தும், கனடாவின் முன்னணி மனிதவுரிமை அமைப்பான கனடிய மனிதவுரிமை மையம் விடுத்துள்ள செய்தியில், பல்லாயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் நடைபெறுகின்றன இவ்வாறான சம்பவங்களை கட்டுப்படுத்துவது தொடர்பான கனடா அரசினதும் வெளிவிவகார அமைச்சரினதும் நிலைப்பாட்டை வரவேற்கும் நாங்கள் இச்சம்பவத்தில் இறந்த கனடியர்களிற்கு எமது அஞ்சலியைத் தெரிவிக்கிறோம்.

இவ்வாறான மனிதநேயமற்ற, காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதத் தாக்குதல்கள் அப்பாவிப் பொதுமக்களின் மீது உலகின் எப்பாகத்தில் இடம்பெற்றாலும் அதனைக் கண்டிக்க வேண்டிய கடப்பாடு அனைவருக்கும் உண்டு என்பதை நாம் மறக்கக்கூடாது.

கனடிய மனிதவுரிமை மையத்தின் கோட்பாட்டின் படி மானிடக் குழுமங்களிற்கிடையோன பிரச்சினைகளிற்கான தீர்வு வன்முறை சார்ந்தாக இருக்க முடியாது என்றும் மானிடக் குழுமங்கள் பேசி தங்களுடைய பிரச்சினைகளை தீர்ப்பதற்கான ஒரு படிமுறையை பரஸ்பர நம்பிக்கையாகக் கட்டியெழுப்பப்படுவதன் மூலமே நிரந்தரமானதொரு தீர்வை அவர்கள் எட்டமுடியும் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.


Similar posts

Comments are closed.