பெண்ணின் தலையை பதம் பார்த்த முள்ளம்பன்றி

Written by vinni   // January 20, 2014   //

santro_porcupine_002பிரேசில் நாட்டில் பெண்ணின் தலை மீது முள்ளம்பன்றி விழுந்ததால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பிரேசிலின் ரியோடி ஜெனிரோ நகரை சேர்ந்தவர் சான்ட்ரா நபுகோ(வயது 52).

இவர் தனது நாயுடன் கடந்த வாரம் சாலையில் வாக்கிங் சென்று கொண்டிருந்தார்.

அப்போது நடைபாதையில் இருந்த விளக்கு கம்பத்தின் மீதிருந்த முள்ளம்பன்றி திடீரென சான்ட்ரா மீது விழுந்தது.

உடனடியாக அலறி துடித்த சான்ட்ராவை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அவரது தலையில் குத்திய முட்களை மருத்துவர்கள் இடுக்கியின் உதவியால் ஒவ்வொன்றாக எடுத்தனர்.

இதுகுறித்து சான்ட்ரா குறிப்பிடுகையில், முள்ளம்பன்றி என் தலையின் மீது விழுந்த போது கடுமையாக வலித்தது.

முதியவர்கள் மீதோ, குழந்தைகள் மீதோ விழுந்திருந்தால் இறந்து போயிருப்பார்கள், நான் வலிமையாக இருந்ததால் உயிர் பிழைத்தேன் என்று தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.