9 வயது இந்து சிறுமி பாகிஸ்தானில் கற்பழித்துக்கொலை

Written by vinni   // January 20, 2014   //

rapeபாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணம், ரஹீம்யார்கான் மாவட்டம், மவுஷாகுனியா பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்டி கட்டா. கடந்த வியாழக்கிழமை வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த இவரது 9 வயது மகளை திடீரென காணவில்லை. மாயமான சிறுமியை போலீசாரும், அவளது உறவினர்களும் தேடி வந்தனர்.

இதற்கிடையே நேற்று சிறுமி வயல்வெளிப்பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தாள். பிணத்தை கைப்பற்றிய போலீசார் கான்பூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு பிரேதபரிசோதனை செய்ய டாக்டர் மறுத்ததால், சிறுமியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
அப்போது, சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

போலீசார் கொலையாளிகளை தேடி வருகிறார்கள். இறந்த சிறுமி இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானில் இந்துக்கள் சிறுபான்மையினராக உள்ளனர். அதிகமானோர் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் வசித்து வருகின்றனர். சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த பெண்கள் கடத்தப்படுதல் போன்ற பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.

பலுசிஸ்தான் மாகாணத்தில் கணிசமான அளவே இந்து மக்கள் உள்ளனர். அவர்கள் தீவிரவாதிகள் மற்றும் கிரிமினல்களால் கடந்த சில ஆண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ளனர்.


Similar posts

Comments are closed.