பேச்சுவார்த்தைக்கு வருமாறு தென் கொரியாவுக்கு ஜப்பான் அழைப்பு

Written by vinni   // January 20, 2014   //

japan_talk_001எல்லை பிரச்னை உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை தீர்க்க அமைதிப் பேச்சு நடத்த முன்வருமாறு சீனா மற்றும் தென் கொரியாவுக்கு ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே அழைப்பு விடுத்துள்ளார்.

இதே கோரிக்கையை ஜப்பான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஃபுமியோ கிஷிடா இரண்டு நாள்களுக்கு முன்னதாக விடுத்திருந்தார்.

இந்நிலையில் அந்த நாட்டு பிரதமரும் இக்கோரிக்கையை முன்வைத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, சீனா ஜனாதிபதி ஜீ ஜின்பிங் மற்றும் தென் கொரிய ஜனாதிபதி பார்க் கியூன்-ஹை ஆகியோர் கடந்த ஓராண்டுக்கு முன்பாகவே பதவிக்கு வந்தனர்.

இருப்பினும், அந்த நாடுகளுக்கு இடையேயான பிரச்னைகளால் அவர்கள் மூவரும் விரோதப் போக்குடன் செயல்பட்டு வருகின்றனர்.

டோக்கியாவில் உள்ள போர் நினைவிடத்துக்கு பிரதமர் ஷின்சோ அபே கடந்த மாதம் சென்று வந்தது தென் கொரியாவுக்கும் சீனாவுக்கும் பிடிக்கவில்லை.

ஆனால் போருக்கு எதிரான உறுதிமொழி எடுக்கவே அங்கு சென்றதாக ஷின்சோ அபே கூறியுள்ளார். ஆசியாவில் உள்ள யாசுகுனி புனிதத் தலத்தை போர் காலத்தில் ஜப்பான் ஆக்கிரமித்துவிட்டது என்று சீனாவும் தென் கொரியாவும் கூறி வருகின்றன.

கிழக்கு சீனக் கடலில் உள்ள தீவு எந்த நாட்டிற்கு சொந்தமானது என்ற விவகாரத்தில் சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய அண்டை நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

எல்லைப் பிரச்னைக்கு தீர்வு காணுவதில் ஜப்பான் பிரதமர் அபே இடையூறாக இருந்து வருகிறார் என்று ஆப்பிரிக்க யூனியனுக்கான சீனத் தூதர் அண்மையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.