இந்த அரசாங்கத்தை விரட்டியடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்!– சரத் பொன்சேகா

Written by vinni   // January 20, 2014   //

Retired General Sarath Fonseka, listens to a speech introducing him before speaking to labor unions from the Marxist backed opposition party in Colomboஇந்த அரசாங்கத்தை விரட்டியடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

போதைப் பொருள் கொள்கலன்களில் இறக்குமதி செய்யப்பட்டு, பாலியல் தொழிலை சட்ட ரீதியாக்கும் இந்த அரசாங்கத்தை விரட்டியடிக்க வேண்டும்.

நாட்டில் வசந்தத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

சட்டத்தை பாதுகாக்கும் தரப்பினர் அரசியல்வாதிகளுக்கு அடிமையாகிவிடக் கூடாது.

நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தனவிற்கு அஞ்சியே பொலிஸார் எனது கூட்டத்திற்கு தடை ஏற்படுத்தி வருகின்றனர்.

தற்போதைய நாட்டின் தலைவர், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காலத்தில் அவர் அபுதாபி சென்ற போது சஜின்வாஸ் குணவர்தன அவருக்கு டாக்சி சாரதியாக செயற்பட்டார்.

போர் நிறைவடைந்து மக்கள் சுபீட்சமான வாழ்க்கை நோக்கிச் செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், நாடு சீரழீந்து செல்கின்றது.

65 ஆண்டுகள் ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் மக்களின் எதிர்காலத்தை சீர்குலைத்துள்ளனர்.

95 வீதமான மக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்,

பலப்பிட்டிய பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


Similar posts

Comments are closed.