ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி

Written by vinni   // January 19, 2014   //

689af819-4c79-44a0-ba5f-d8e0d17e20b5_S_secvpfகிராண்ட்சிலாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது.

7–ம் நாளான இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு 4–வது சுற்று ஆட்டம் ஒன்றில் முதல் நிலை வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா)– செர்பியாவின் இவானோவிக் மோதினர்.

இதில் 5 முறை சாம்பியனான செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். முதல் செட்டை செரீனா கைப்பற்றினார். அடுத்த 2 செட்டையும் இவானோவிக் கைப்பற்றி வென்றார். செரீனாவை 4–6, 6–3, 6–3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இவானோவிக் முதல் முறையாக கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.

மற்ற 4–வது சுற்று ஆட்டங்களில் 4–ம் நிலை வீராங்கனை சீனாவின் லீ நா– ரஷியாவின் மகரோவா மோதினர். இதில் லீ நா 6–2, 6–0 என்ற நேர்செட் கணக்கில் எளிதில் வென்று கால் இறுதிக்குள் நுழைந்தார்.

மற்றொரு 4–வது சுற்று ஆட்டத்தில் 9–ம் நிலை வீராங்கனை கெர்பர் (ஜெர்மனி) அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அவர் இத்தாலி வீராங்கனை பென்னாட்டிடம் 1–6, 6–4, 5–7 என்ற செட் கணக்கில் தோல்வி கண்டார். கால் இறுதி ஆட்டத்தில் லீ நா– பென்னாட்டா மோதுகின்றனர்.

ஆண்கள் இரட்டையர் பிரிவு 3–ம் சுற்று ஆட்டத்தில் 5–ம் நிலை ஜோடியான லியாண்டர் பெயஸ் (இந்தியா)– ஸ்டாபனக் (செக்குடியரசு) ஜோடியும் யுகி பாம்ப்ரி (இந்தியா)– வீனஸ் (நியூசிலாந்து) ஜோடியும் மோதின.

இதில் பெயஸ் ஜோடி 6–3, 6–2 என்ற செட் கணக்கில் வென்று 4–வது சுற்றுக்குள் நுழைந்தது.

கிராண்ட்சிலாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது.

Similar posts

Comments are closed.