ஜெனிவா அமைதி பேச்சுவார்த்தைக்கு சிரியா போராளி குழுக்கள் சம்மதம்

Written by vinni   // January 19, 2014   //

1dbda134-2b33-479a-9023-d261bdbbc5a2_S_secvpfசிரியாவில் கடந்த 40 ஆண்டுகளாக ஆட்சி செலுத்திவரும் ஷியா பிரிவு அதிபர் பஷர் அல் ஆசாத் குடும்பத்திற்கு எதிராக போராளிக்குழுக்கள் சண்டையிட்டு வருகின்றன. கடந்த 3 வருடங்களாக நடந்துவரும் இச்சண்டையில் அங்கு 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 20 லட்சம் மக்கள் வெளிநாடுகளிலும், 65 லட்சம் மக்கள் உள்நாட்டிலும் அகதிகளாகியுள்ளனர்.

இப்பிரச்சினைக்கு முடிவுகட்ட அடுத்தவாரம் ஜெனிவாவில் நடைபெறும் இரண்டாம் கட்ட அமைதி பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள இருதரப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் அதிபர் ஆசாத் பதவி விலகும் வரை பேச்சுவார்த்தையில் பங்கேற்கப்போவதில்லை என்று போராளிகள் அமைப்பான சிரியா தேசிய கூட்டணி அறிவித்தது.

இதற்கு போராளிகள் அமைதிப்பேச்சுவார்த்தையில் பங்கேற்க வேண்டும். இல்லையேல் அமெரிக்க, பிரிட்டன் நாடுகளின் உதவிகள் கிடைக்காது என்று கூறப்பட்டது. இந்நிலையில் போராளிக்குழுக்கள் இடையே நடந்த வாக்கெடுப்பில் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வது என்று முடிவெடுக்கப்பட்டது.

இதையடுத்து சுவிட்சர்லாந்தில் நடைபெறும் ஜெனிவா அமைதி பேச்சுவார்த்தையில் கலந்துகொள்கிறோம் என்று அவர்கள் கூறியுள்ளனர். இதை அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரியும் வரவேற்றுள்ளார். இப்பேச்சுவார்த்தையில், உள்நாட்டு போரை முடிவிற்கு கொண்டுவர அதிபர் ஆசாத்தின் ஆட்சிக்கு முடிவு கட்டும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Similar posts

Comments are closed.