அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பேராசிரியைக்கு ரூ.1½ கோடி விருது

Written by vinni   // January 19, 2014   //

f16c57f9-38df-4d67-a8f0-a46da82f0c1f_S_secvpfஅமெரிக்காவில் உள்ள மிச்சோரி பல்கலைக்கழகத்தில் இயற்பியல் மற்றும் வான் சாஸ்திரம் இயல் பேராசிரியையாக இந்திய வம்சாவளியை சேர்ந்த மீரா சந்திரசேகர் பணியாற்றி வருகிறார்.

இவருடைய கல்வி புகட்டு சிறப்பை பாராட்டி 2014–ம் ஆண்டிற்கான ‘ராபர்ட் பாஸ்டர் ஷெர்ரி விருதுக்கு தேர்வாகி இருக்கிறார். இதன் மூலம் உயரிய விருதுடன் அவருக்கு ரூ.1½ கோடி (2½ லட்சம் டாலர்) பரிசுதொகை கிடைக்கும். இந்த தகவலை பாய்லோர் பல்கலைக்கழக துணைத்தலைவர் எலிசபெத் டாவிஸ் அறிவித்தார்.

விருது பெற்ற பேராசிரியை மீரா சந்திரசேகர் 1968–ல் மைசூர் எம்.ஜி.எம். கல்லூரியில் பட்டப்படிப்பும், பிறகு சென்னை ஐ.ஐ.டி.யில் படித்து பட்டமும் பெற்றவர். இதுமட்டுமின்றி தனது சிறந்த பணிக்காக அமெரிக்காவில் ஏற்கனவே பல்வேறு விருதுகளையும் பெற்றிருக்கிறார்.


Similar posts

Comments are closed.