செவ்வாய் கிரகத்தில் விவசாயம் செய்ய சாத்தியம்!

Written by vinni   // January 19, 2014   //

mars_garden_001செவ்வாய்கிரகத்தில் விவசாயம் செய்யலாம். குறிப்பாக உணவு தானியங்களை பயிரிடலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

டச்சு பல்கலைகழகத்தை சேர்ந்த சுற்று சூழல் விஞ்ஞானி விஜ்ஜர் வேம்லிங் இத்தகவலை வெளியிட்டு உள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

செவ்வாய் மற்றும் நிலவில் தாவரங்களை வளர்க்க முடியும் என்ற ஆராய்ச்சிக்காக நாசா வழங்கிய செவ்வாய் மற்றும் நிலாவின் செயற்கை மண்ணில் 14 தாவர இனங்களை பயிரிட்டு சோதனை நடைபெற்றது.

இந்த சோதனை 50 நாட்கள் நடைபெற்றது. ஆச்சரியப்படதக்க வகையில் சில தானியங்கள் 24 மணி நேரத்தில் வளர்ந்து இருந்தது. சில இனங்கள் பூத்து குலுங்கின. தக்காளி மற்றும் கேரட் இனங்கள் வளர்ந்து இருந்தன. சில விதைகள் முளைவிட்டு இருந்தன. மொத்தம் 840 பானைகளில் 4,200 விதைகள் பயிரிடப்பட்டன.

இது பொல்ல் அரிசோனாவில் இருந்து கொண்டுவரப்பட்ட எரிமலை மண்ணிலும் சோதனை நடத்தப்பட்டது.


Similar posts

Comments are closed.