சமந்தாவை வீழ்த்திய அனா

Written by vinni   // January 18, 2014   //

samantha_ana_002அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் சமந்தாவை வீழ்த்தி அனா இவானோவிச் தகுதி பெற்றார்.

இந்தாண்டுக்கான முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டிகள் அவுஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.

இத்தொடரில் மகளிர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் விளையாட, முன்னாள் நம்பர் 1 வீராங்கனை அனா இவானோவிச்(செர்பியா) தகுதி பெற்றார்.

மூன்றாவது சுற்றில் உள்ளூர் வீராங்கனை சமந்தா ஸ்டோசருடன் நேற்று மோதிய இவானோவிச், மிகவும் விறுவிறுப்பாக அமைந்த முதல் செட்டில் 6-7 என்ற கணக்கில் தோற்று பின்தங்கினார். டை பிரேக்கர் வரை இழுபறியாக நீடித்த முதல் செட் ஆட்டம் 65 நிமிட நேரம் நடந்தது.

இரண்டாவது செட்டில் சுதாரித்துக் கொண்டு விளையாடிய இவானோவிச் 6- 4 என வென்று பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது.

கடைசி செட்டில் தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய இவானோவிச் 6- 7, 6- 4, 6- 2 என்ற செட் கணக்கில் போராடி வென்று 4வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு 3வது சுற்று ஆட்டத்தில் நம்பர் 1 வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் 6- 3, 6- 3 எ ன்ற நேர் செட்களில் டேனியலா ஹன் டுசோவாவை(ஸ்லோவகியா) எளிதில் வீழ்த்தினார்.

ஜேர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் 6- 3, 6- 4 என்ற நேர் செட்களில் அலிசான் ரிஸ்கியை(அமெரிக்கா) வென்று 4வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

கனடாவின் யூஜெனி பவுச்சார்டு தனது 3வது சுற்றில் 6- 2, 6- 2 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் லாரன் டேவிசை வீழ்த்தினார்.

முன்னணி வீராங்கனைகள் நா லி(சீனா), பிளாவியா பென்னட்டா(இத்தாலி), எகடரினா மகரோவா(ரஷ்யா) ஆகியோரும் 4வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.


Similar posts

Comments are closed.