நாட்டுக்காக ஜெனிவா செல்லவும் தயார்!- ஜோன் அமரதுங்க

Written by vinni   // January 18, 2014   //

war-crimes1நாட்டுக்காக எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவுக்கு சென்று மனித உரிமை ஆணைக்குழுவில் நாட்டின் சார்பில் பேசவும் தான் தயாராக இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

எந்த மாநாடாகவும் சர்வதேச அமைப்பாக இருந்தாலும் அங்கு சென்று நாட்டை காப்பாற்றுவதற்காக குரல் கொடுக்க நான் பின்நிற்க போவதில்லை.

அரசியல் கட்சிகள் இடையில் கருத்து முரண்பாடுகள் எதுவாக இருந்தாலும் அதனை நாட்டுக்கு எதிரான சர்வதேச விவகாரங்களின் போது சம்பந்தப்படுத்தி கொள்ளக் கூடாது என்பதே எனது நிலைப்பாடும் நம்பிக்கையுமாகும்.

எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தால், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் அனுமதியுடன் ஜெனிவா மாநாட்டிலும் கலந்துகொள்ள முடியும் என்றார்.


Similar posts

Comments are closed.