அசாமில் தீவிரவாதிகள் அட்டகாசம்: ஐவர் மரணம்

Written by vinni   // January 18, 2014   //

terroristஅசாமில் செயல்பட்டு வரும் என்.டி.எப்.பி தீவிரவாதிகள், பேருந்து ஒன்றின் மீது இன்று நடத்திய தாக்குதலில் 5 பேர் கொல்லபட்டும் இருவர் காயமடைந்தும் உள்ளனர்.

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த சிலிகுரியிலிருந்து ஷில்லாங்க் நோக்கி சென்று கொண்டிருந்த இரவு நேர விரைவு பேருந்தை வழிமறித்து தீவிரவாதிகள், சரமாரியாக தாக்குதல் நடத்தினர்.

காயமடைந்தவர்கள் பொங்கெய்கோன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எதற்காக இத்தாக்குதல் நடைபெற்றதென்பது இதுவரை தெரியவில்லை.

இது குறித்த தகவல் கிடைத்தவுடன், காவல்துறையினரும் பாதுகாப்பு படையினரும் சம்பவ இடத்தை சுற்றி வளைத்து தீவிரவாதிகளை தேடி வருகின்றனர்.


Similar posts

Comments are closed.