ஐ.மு.கூட்டணியின் இலக்கு ஆட்சி அதிகாரம் இல்லை: சிதம்பரம்

Written by vinni   // January 18, 2014   //

chithambaramஐக்கிய முற்போக்கு கூட்டணியின் இலக்கு ஆட்சி அதிகாரம் பெறுவதில்லை. மாறாக மக்களுக்கு தொண்டாற்றி சேவை புரிவதே என மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெறும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் கருத்து வெளியிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்

ஐ.மு. கூட்டணி ஆட்சியில் இந்தியா கடந்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. இந்த வளர்ச்சி இனியும் தொடரும் என்று பேசினார்.

மக்களவைத் தேர்தலை எதிர் கொள்ளவிருக்கும் காங்கிரஸ் கட்சி குறைந்தது 272 வேட்பாளர்க்ளை 35 வயதிற்கும் குறைவானவர்களாக முன் நிறுத்த வேண்டும். இளைஞர்கள் கையில் பொறுப்பை ஒப்படைக்கும் வகையில் காங்கிரஸ் இந்த முடிவை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

பிரித்தாள்வது அல்ல ஒருங்கிணைப்பதே கொள்கை: நாட்டு மக்களை பிரித்தாள்வது அல்ல மக்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கு சேவை செய்வது தான் காங்கிரஸ் லட்சியம் என பாஜகவை விமர்சித்துப் பேசினார் சிதம்பரம்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் நோக்கம் சமமான வளர்ச்சி அனைவருக்கும் சமூக நீதி என்பதுதான் என்றார்.


Similar posts

Comments are closed.