பெற்ற மகளுக்கே குழந்தை வரம் கொடுத்த தந்தை

Written by vinni   // January 18, 2014   //

rapeபெங்களூரில் மகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனர்.

பெங்களூர் கும்பலுகூடு அருகே உள்ள புவனேஷ்வரி நகரில் வசித்து வருபவர்கள் முத்துராஜ், லீலாவதி தம்பதிகள். முத்துராஜ் தச்சு தொழிலாளியாகவும், லீலாவதி ஆயத்த ஆடை தொழிற்சாலையிலும் வேலை செய்கிறார்கள்.

இவர்களுடைய 17 வயது மகள் சுமதி. கல்லூரி ஒன்றில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், வீட்டில் தனியாக இருக்கும் சுமதியை, பெற்ற மகள் என்று கூட பார்க்காமல் முத்துராஜ் கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

மேலும், இதனை வெளியே சொன்னால் உன்னையும், உன் அம்மாவையும் கொலை செய்துவிடுவேன் என்று முத்துராஜ் மிரட்டியுள்ளார். இதில் பயந்துபோன சுமதி, இதுபற்றி வெளியில் யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார்.

இதற்கிடையில், சுமதிக்குதிடீரென்று நேற்று முன்தினம் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. உடனே தனது மகளை மருத்துவமனைக்கு லீலாவதி அழைத்து சென்றுள்ளார். அங்கு சுமதியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கர்ப்பம் அடைந்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த லீலாவதி இதுபற்றி தனது மகளிடம் கேட்டுள்ளார். அப்போது, தந்தை முத்துராஜ் கடந்த 3 மாதங்களாக கொலை செய்து விடுவதாக மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக அழுதபடியே கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, தனது கணவர் முத்துராஜ் மீது கும்பலுகூடு பொலிஸ் நிலையத்தில் லீலாவதி புகார் கொடுத்திருக்கிறார். அதன்பேரில் பொலிசார் வழக்கு பதிவு செய்து முத்துராஜை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தந்தையே பெற்ற மகளை மிரட்டி 3 மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Similar posts

Comments are closed.