பிரிட்டன் தூதரக அதிகாரி தற்கொலை

Written by vinni   // January 18, 2014   //

downloadபிரிட்டன் தூதரக அதிகாரி ஒருவர் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ருமேனியா நாட்டின் வடமேற்கே உள்ள பாயா மாரே என்ற இடத்தில் மாரா என்ற உணவு விடுதி உள்ளது.

இவ்விடுதியின் 7வது மாடியில் ஜன்னல் வழியாக கீழே குதித்து, நபர் ஒருவர் நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்டார்.

இதன்பின் நடத்தப்பட்ட விசாரணையில், தற்கொலை செய்து கொண்டவர் ருமேனிய தலைநகரான புசாரெஸ்டில் உள்ள பிரிட்டன் தூதரக அலுவலகத்தில் பணியாற்றுவது தெரியவந்தது.

எனினும் குறித்த நபரின் பெயரையோ, மற்ற விவரங்களையோ வெளியிட தூதரகம் மறுத்துவிட்டது.


Similar posts

Comments are closed.