ஆப்கானில் முதன் முறையாக பெண் பொலிஸ் அதிகாரி நியமனம்

Written by vinni   // January 18, 2014   //

afghan_woman_police_002ஆப்கானிஸ்தானில் முதன் முறையாக பெண் ஒருவர் பொலிஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு மிக கடுமையான கட்டுப்பாடுகளை தலிபான்கள் விதித்துள்ளனர்.

இன்றளவும் தலிபான்களின் ஆதிக்கம் அதிகம் இருப்பதால் பெண்கள் சுதந்திரமாக இருப்பதில் சிக்கல் நீடிக்கிறது.

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அரசு முதல் முறையாக பெண் ஒருவரை பொலிஸ் உயர் அதிகாரியாக நியமித்துள்ளது.

கர்னல் ஜமீலா பயாஜ்(வயது 50) என்பவர் காபூலில் உள்ள தலைமை காவல் நிலையத்தில் உயர் அதிகாரியாக பணியமர்த்தப்பட்டுள்ளார்.

இது ஆப்கான் மட்டுமின்றி, உலக நாடுகளையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஆப்கான் அரசின் இந்த செயல் நாட்டில் பெண் சுதந்திரம் மற்றும் அவர்களின் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் என உலக நாடுகளின் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தான் ஒரு பொலிஸ் அதிகாரியாக இருந்தாலும், ஒரு பெண் என்ற முறையில் பல தாக்குதல்களுக்கு ஆளாகியுள்ளதாக ஜமீலா கூறியுள்ளார்.

தனக்கு உயர் பதவி கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி அடைந்துள்ள ஜமீலா, நாட்டில் பெண்கள் முன்னேற்றத்திற்கு முன் உதாரணமாக இருந்து பாடுபடப்போவதாக அறிவித்துள்ளார்.

இவர் திருமணம் ஆகி ஐந்து குழந்தைகளுக்குத் தாய் என்பது குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.