நிலவின் மேற்பரப்பில் காணப்பட்ட மர்ம பொருள்

Written by vinni   // January 18, 2014   //

google_moon_001பூமியை கூகுள் எர்த் படமெடுப்பது போல் நிலவை கூகுள் நிலா படமெடுத்து வந்தது. அப்போது ஒரு குறிப்பிட்ட மர்மபொருள் நிலவின் மேற்பரப்பில் இருப்பது படங்களில் விழுந்தது.

முக்கோண வடிவில் இருந்த அந்த மர்மபொருளின் முனைகளில், ஒளிரும் தன்மை கொண்ட 7 சிறு புள்ளிகள் காணப்பட்டது குறிப்பிடத்ததக்கது.

அண்டார்டிகா பகுதியில் கூட முன்னதாக ஒரு சமயத்தில் இது போன்ற மர்ம கட்டமைப்பு காணப்பட்டதாக தெரிவிக்கப்பபட்டுள்ளது.

நிலவை ஆராயச்சென்ற விண்கலமாக கூட இது இருக்க வாய்ப்புள்ளதாகவும் அல்லது நிலவின் அடித்தளத்தை மனிதர்கள் ஆக்கிரமித்து கொண்டதற்கான அறிகுறியாக இது இருக்கக்கூடும் என்றும் கூறிப்படுகிறது.

விவரிக்க முடியாத அளவிற்கு இப்பொருள் காணப்பட்டதாகவும், அதன் முனைகளில் ஏழு ஒளிரும் புள்ளிகள் உள்ளதாக இது தொடர்பான அமானுஷ்ய ஆராய்ச்சியில் ஈடுபட்டுவரும் ரீல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இது நிலாவில் வடக்காக 22042’38.46N தீர்க்க ரேகையிலும் கிழக்காக 142034’44.52E தீர்க்க ரேகையிலும் காணப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


Similar posts

Comments are closed.