நட்பு நாடுகளை உளவு பார்க்க வேண்டாம்: பராக் ஒபாமா

Written by vinni   // January 18, 2014   //

barack-obama-e10dcc69da3adc1dநட்பு நாடுகளின் தலைவர்களை வேவு பார்க்க வேண்டாமென அமெரிக்க உளவு அமைப்புகளுக்கு, ஜனாதிபதி பராக் ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.

பல்வேறு நாடுகளின் இணையதளம் மற்றும் தொலைபேசி உரையாடல் பதிவுகளை அமெரிக்க உளவு அமைப்புகள் கண்காணித்து வருகின்றன.

இத்திட்டம் குறித்து கடந்த ஒரு மாத காலமாக பரிசீலனை நடைபெற்று வந்த நிலையில், வொஷிங்டனில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா நேற்று கருத்து வெளியிட்டார்.

உலக அளவில் நமது கண்காணிப்பு மற்றும் வேவு பார்க்கும் நடவடிக்கைகள் கவனம் பெற்றன. இதை மனதில் கொண்டு, தேசியப் பாதுகாப்பு நோக்கம் இல்லாத பட்சத்தில் நமது தோழமை நாடுகளின் தலைவர்களை வேவு பார்க்கக் கூடாது என்று உளவு மற்றும் பாதுகாப்பு அமைப்புகளிடம் தெரிவித்துள்ளேன்.

எனினும், உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாட்டு அரசுகளின் நோக்கங்கள் பற்றிய தகவல்களை நமது உளவு அமைப்புகள் தொடர்ந்து திரட்டும் என்பதைத் தெளிவுபடுத்துகிறேன் என்றார்.

முன்னதாக, ஜெர்மனி, பிரான்ஸ், பிரேசில், இந்தியா உள்ளிட்ட நெருங்கிய நட்பு நாடுகளையே அமெரிக்கா கண்காணிப்பதை சிஐஏ முன்னாள் ஊழியர் எட்வர்டு ஸ்னோடென் ஆவணப்பூர்வமாக அம்பலப்படுத்தினார்.

இது சம்பந்தப்பட்ட நாடுகளில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.