61 இலங்கை மீனவர்களை விடுதலை செய்யுமாறு தமிழக முதல்வர் உத்தரவு

Written by vinni   // January 18, 2014   //

jeyalalithaதமிழக சிறைச்சாலைகளிலுள்ள 61 இலங்கை மீனவர்களை விடுதலை செய்யுமாறு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதாக இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 121 தமிழக மீனவர்களை விடுதலை செய்து நேற்று இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் விடுதலை செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் ஓரிரு தினங்களில் தமிழகத்திற்கு புறப்பட்டுச் செல்வார்கள் என தெரியவருகிறது.

இலங்கையும் தமிழகமும், புதுசேரியும் ஏற்கனவே 52 மீனவர்களை விடுதலை செய்துள்ளன. இவர்கள் நேற்று முன்தினம் தமது நாடுகளுக்கு திரும்பினர்.

தமிழகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 30 மீனவர்களும் புதுசேரியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 22 மீனவர்களும் இவ்வாறு விடுதலை செய்யப்பட்டனர்.


Similar posts

Comments are closed.