வடக்கிலிருந்து இராணுவம் திரும்பபெறப்பட மாட்டாது: அமெரிக்காவின் கோரிக்கைக்கு இலங்கை மறுப்பு

Written by vinni   // January 18, 2014   //

armyவடக்கில் நிலைக்கொண்டுள்ள இராணுவத்தினரை திரும்ப அழைக்கப் போவதில்லை என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

இலங்கையின் வடக்கில் நிலைக்கொண்டுள்ள இராணுவத்தினரை திரும்ப பெறுதல் உட்பட ஆறு விடயங்களை நிறைவேற்றினால், எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட உள்ள யோசனையை விலகிக்கொள்வதாக அமெரிக்க விடுத்த கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

அமெரிக்காவின் இலங்கைக்கு எதிரான யோசனையை திரும்பபெறுவதற்காக இலங்கையின் தேசிய பாதுகாப்பை காட்டிக்கொடுக்க போவதில்லை என அமெரிக்காவுக்கு பதிலளித்துள்ளதாக அரசாங்கத்தின் உயர்மட்ட தரப்பின் தகவல்கள் தெரிவித்தன.

அமெரிக்காவின் இந்த கோரிக்கைககளுக்கு இணங்கினால் மீண்டும் பிரிவினைவாத்திற்கு வழி திறக்கப்படும் என அரசாங்கம், அமெரிக்காவிடம் கூறியுள்ளது.

13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு அமைய வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்குதல், வடக்கில் இராணுவம் கைப்பற்றியுள்ள நிலங்களை விடுவித்தல், போர் குற்றம் சுமத்தப்பட்டுள்ள இராணுவ அதிகாரிகளுக்கு எதிரான சுயாதீன விசாரணை நடத்துதல், அரசசார்பற்ற நிறுவனங்கள் எவ்விதமான தடைகளும் இன்றி நாட்டில் செயற்பட அனுமதித்தல், கைது செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிச் சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தல் அல்லது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தல் போன்ற விடயங்களை நிறைவேற்ற வேண்டும் என அமெரிக்கா, இலங்கை அரசிடம் கேட்டுள்ளது.


Similar posts

Comments are closed.