பௌத்த அமைப்புக்களை தடை செய்ய வேண்டும்: விக்ரமபாகு

Written by vinni   // January 18, 2014   //

vikramaகிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதத்தலங்களை தாக்கி வரும் தீவிரவாத பௌத்த அமைப்புக்களை அரசாங்கம் தடை செய்ய வேண்டும் என்று நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரட்ன கோரிக்கை விடுத்துள்ளார்.

பொதுபல சேனா மற்றும் இராணுவ பலய மற்றும் சிஹல ராவய என்ற இந்த அமைப்புக்கள் இலங்கை அரசாங்கத்தின் ஆதரவுடனேயே இயங்கி வருகின்றன.

எனினும் அதிகாரம் அற்ற பொலிஸ்துறையினால் இந்த அமைப்புக்களுக்கு எதிராக செயற்படமுடியாமல் உள்ளது.

இந்தநிலையில் அரசாங்கத்தில் உள்ள அமைச்சர் டியு குணசேகர போன்றவர்கள் மாக்ஸிஸத்தை மறந்து அரசாங்கத்தின் குற்றங்களை மறைக்கும் செயல்களுக்கு துணைப் போவதாக விக்ரமபாகு குற்றம் சுமத்தியுள்ளார்.


Similar posts

Comments are closed.