வாலிபரை கொன்று சமைத்து சாப்பிட்ட வாலிபரால் பரபரப்பு…..

Written by vinni   // January 17, 2014   //

man_murder_eat_001.w245மத்திய ஆப்ரிக்க குடியரசு நாட்டை சேர்ந்த நபர் ஒருவர், வாலிபரை கொன்று சமைத்து சாப்பிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் மத்திய ஆப்ரிக்க குடியரசு நாட்டில் நடந்த மதக்கலவரத்தில், 1000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

தலைநகர் பெங்குயில் நடந்த கலவரத்தில் நபர் ஒருவரின் கர்ப்பிணி மனைவி, மனைவியின் தங்கை மற்றும் குழந்தை கொலை செய்யப்பட்டனர்.

மனைவி இழந்த துக்கம் தாங்காததால், கொலை செய்த நபர் மீது வெறியுடன் இருந்தார்.

இதற்கிடையே அவர் பேருந்தில் செல்வதை பார்த்தவர், தனது ஆதரவாளர்களுடன் சென்று கத்தியால் குத்தி கொலை செய்து விட்டார்.

இருப்பினும் ஆத்திரம் தாங்காமல், அவரது சடலத்தை வேக வைத்ததுடன், மாமிசத்தை சாப்பிட்டுள்ளார்.

மிகவும் கொடூரமாக நடந்து கொண்ட நபர், தன்னை தானே பைத்தியக்கார நாய் எனவும் பெயரிட்டுக் கொண்டுள்ளார்.


Comments are closed.