ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: செரீனா, லீ நா 4–வது சுற்றுக்கு தகுதி

Written by vinni   // January 17, 2014   //

downloadகிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. போட்டியின் 5–வது நாளான இன்று பெண்கள் ஒன்றையர் பிரிவில் 3–வது சுற்று ஆட்டம் ஒன்றில் முதல் நிலை வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) – ஹன்ட்சோவா (சுலோவாக்கியா) மோதினர். இதில் செரீனா 6–3, 6–3, என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 4–வது சுற்றுக்குள் நுழைந்தார். அத்துடன் ஆஸ்திரேலிய ஓபனில் புதிய சாதனையாக, 61 வெற்றிகளை பதிவு செய்துள்ளார்.

மற்ற 3–வது சுற்று ஆட்டங்களில் கெபர் (ஜெர்மனி) 6–3, 6–4 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் அலிசன் ரிஸ்க்கை வீழ்த்தி 4–வது சுற்றுக்கு முன்னேறினார்.

சீனா வீராங்கனை லீ நா 1–6, 7–6 (7–2), 6–3, என்ற செட் கணக்கில் சபரோவாவை (செக்குடியரசு) போராடி வென்று 4–வது சுற்றுக்கு முன்னேறினார்.

இத்தாலி வீராங்கனை பென்னட்டா 6–1, 7–5 என்ற செட் கணக்கில் ஜெர்மனியை சேர்ந்த மோனா பார்தெல்லை வீழ்த்தி 4–வது சுற்றுக்குள் நுழைந்தார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3–வது சுற்றில் மேயர் (ஜெர்மனி) –ஜானேவிச் (போலந்து) பலப்பரீட்சை நடத்தினர். இதில் மேயர் 7–5, 6–2, 6–2, என்ற செட் கணக்கில் வென்று 4–வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு 3–வது சுற்று ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் டேவிட் பெரர் 6–2, 7–6, (7–5), 6–2 என்ற செட் கணக்கில் பிரான்சின் சார்டியை வீழ்த்தினார்.


Similar posts

Comments are closed.