4 வயது சிறுமி துப்பாக்கியால் சுட்டதில் சிறுவன் பரிதாப மரணம்

Written by vinni   // January 17, 2014   //

Kids-with-guns…-அமெரிக்காவின் மிச்ஹிகன் மாநிலத்தின் டெட்ராய்ட் நகரில் உள்ள உள்ள ஒரு வீட்டில் 4 வயது சிறுவன், சமவயதுள்ள தனது சித்தப்பா மகளுடன் நேற்று ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தான்.

விரட்டிக் கொண்டே வந்த சிறுமியின் பார்வையில் இருந்து மறையும் நோக்கத்தில் படுக்கையறையில் உள்ள கட்டிலின் அர்கே ஒளிந்திருந்த சிறுவனை தூரமாக இருந்தவாறே அவள் கண்டுபிடித்து விட்டாள். விளையாட்டாக அவனை மிரட்டும் நோக்கத்தில் கட்டிலின் அடியில் இருந்த துப்பாக்கியை எடுத்து, சகோதரனை நோக்கி குறிவைத்தபடி, ‘ஹேண்ட்ஸ் அப்’ என கூறிய சிறுமி கலகலவென சிரித்தாள்.

அவளது சிரிப்பொலி சிறுவனின் காதுகளை வந்தடைவதற்குள் அவள் பிடித்திருந்த துப்பாக்கியில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த தோட்டா அவனை பதம் பார்த்தது. ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த அவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

கவனக்குறைவாக, எளிதில் குழந்தைகளின் கையில் கிடைக்கும் வகையில் துப்பாக்கியை வைத்திருந்த அந்த வீட்டின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற நிருபர்களின் கேள்விக்கு பதிலளிக்க டெட்ராய்ட் நகர போலீஸ் செய்தி தொடர்பாளர் அடம் மடேரா மறுத்து விட்டார்.


Similar posts

Comments are closed.