சீன தலைநகர் பெய்ஜிங்கில் கடும் மூடுபனி : 2 கோடி மக்கள் பாதிப்பு

Written by vinni   // January 17, 2014   //

Great-Wall-Beijing_1சீன தலைநகர் பெய்ஜிங்கில் ஏற்பட்ட கடும் பனிப்பொழிவால் 2 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவில் இந்த ஆண்டு கடும் குளிர் நிலவுகிறது. இந்த நிலையில் தலைநகர் பெய்ஜிங்கில் நேற்று கடும் மூடுபனி நிலவியது. இதனால் காற்றில் மாசுதன்மை அதிகரித்தது.

எனவே, நேற்று காலை கண் விழித்த லட்சக்கணக்கான மக்கள் தாங்க முடியாத தலை வலியால் அவதிப்பட்டனர். மேலும், பெய்ஜிங் நகரில் வாழும் சுமார் 2 கோடி பேர் வீடுகளைவிட்டு வெளியே வராமல் உள்ளேயே முடங்கி கிடந்தனர். இதனால் அவர்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

சிலர் முகமூடிகளை அணிந்தபடியே வெளியில் நடமாடினர். மூடுபனி கடுமையாக இருந்ததால் வெள்ளை திரை சீலை போன்று இருந்தது. ரோட்டில் சென்ற வாகனங்கள் எதுவும் தெரியவில்லை.

இதனால் பெய்ஜிங் நகரில் இருந்து முக்கிய பகுதிகளுக்கு செல்லும் பெய்ஜிங்– ஷங்காய், பாகுயிங்– குயாங்ஷு, பெய்ஜிங்– ஹார்பின், பெய்ஜிங், பிங்க்கூ செல்லும் 4 நெடுஞ்சாலைகள் மூடப்பட்டன.

எனவே, போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பும், பெய்ஜிங்கில் இதே போன்ற நிலை ஏற்பட்டது. இந்த கடுமையான மூடுபனியால் சுற்றுலா போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.


Similar posts

Comments are closed.