பிரான்ஸ் அதிபருடன் தொடர்பு : பத்திரிகை மீது மானநஷ்ட வழக்கு

Written by vinni   // January 17, 2014   //

22bf4cb5-e9a2-44cb-8af3-0b2059414d42_S_secvpfபிரான்ஸ் அதிபர் பிரான் கோயிஸ் ஹோலந்த் (58). இவருக்கும் பிரெஞ்ச் நடிகை ஜுலி கெயத்துக்கும் கள்ள தொடர்பு இருப்பதாக ஒரு பத்திரிகை செய்தி வெளியிட்டது.

இதனால் பிரான்ஸ் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. அதிபர் ஹோலந்தின் காதலி வலேரி டிரயர்வெயிலர் தற்கொலைக்கு முயன்று ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

தன்னை பற்றி வெளியான செய்திக்கு அதிபர் ஹோலந்து கண்டனம் தெரிவித்தார். ஆனால், நடிகை ஜுலி கெயத் மறுப்பு தெரிவித்தார்.

மேலும் செய்தி வெளியிட்ட பத்திரிகை மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் அவதூறு செய்தி வெளியிட்டதற்காக தனக்கு ரூ.50 லட்சம் நஷ்டஈடும், வழக்கிற்கான செலவு தொகை ரூ.4 லட்சமும் வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.

இந்த தகவலை, நடிகை ஜுலி கெயத் பேட்டியின் போது தெரிவித்தார். இதற்கிடையே ஆஸ்பத்திரியில் தங்கியிருந்த தன்னை அதிபர் ஹோலந்து நேரில் வந்து பார்த்து ஆறுதல் தெரிவிக்கவில்லை என அவரது காதலி வெலேரி வருத்தம் அடைந்துள்ளார் என பிரான்ஸ் ரேடியோக்களில் செய்தி வெளியானது.


Similar posts

Comments are closed.