உலக நாடுகளில் உறுப்புத் தானம் செய்ய முன் வருபவர்கள் தொகை குறைவாகவே உள்ளது – ஜேர்மன் வைத்திய சம்மேளனம்

Written by vinni   // January 17, 2014   //

index (1)இரத்த மாற்று சிகிச்சை முறையும் உள்ளுறுப்பு மாற்று சிகிச்சையும் நவீன உலகில் பல உயிர்களைக் காப்பாற்றி வரும் அதிசய நிலையில், ஜேர்மன் உட்பட்ட உலக நாடுகளில் உறுப்புத் தானம் செய்ய முன் வருபவர்கள் தொகை மிகவும் குறைந்த அளவில் இருப்பது கவலையை அளிப்பதாக ஜேர்மன் வைத்திய சம்மேளனம் அறிக்கை விடுத்துள்ளது.

ஜேர்மனில் சென்ற வருடம் 11,000 நோயாளிகள் ஈரல், சிறுநீரகம் கணயச் சுரப்பி போன்ற உறுப்பு மாற்று சிகிச்சைக்காக் காத்திருந்த போதிலும் 876 உறுப்புக்கள் மட்டும் தானம் செய்யப் பட்டமை வருத்த மளிப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது.

உறுப்புத் தானம் செய்வதற்கான மன உறுதி மக்கள் மத்தியில் வளர வேண்டுமெனவும் ஜேர்மன் வைத்திய சம்மேளனம் தன் அறிக்கை மூலம் அற கூவல் விடுத்துள்ளது.

இது பற்றிய முழு விபரங்களையும் குடும்ப வைதியர், வைத்திய சாலைகள், உடல் நல காப்புறுதிக் கூட்டுத் தாபனங்களிடமிருந்து (ர்நயடவா ஐளெரசயnஉந) பெற்றுக் கொள்ளாலாமெனவும் சொல்லப் பட்டுள்ளது – பிறர் உயிர் காக்கவல்ல உடல் உறுப்புக்கள் தீக்கு வீணாய் இரையாவது நவீன உலகில் தர்மம் தானா?


Similar posts

Comments are closed.