பிரபாகரன் மீண்டும் வருவார் : ராஜபக்ச கூட்டத்திடம் இருந்து இலங்கையை மீட்பார்

Written by vinni   // January 17, 2014   //

imagesராஜபக்ச கூட்டத்திடம் இருந்து இலங்கையை மீட்க பிரபாகரன் மீண்டும் வருவார் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.

வைகோ அவரது சொந்த ஊரான நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா கலிங்கப்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கடந்த 4 நாட்களாக பங்கேற்று வந்தார்.

நேற்று வைகோவின் சார்பில் வீரத்தாயார் வேலுநாச்சியார் வாழ்க்கை வரலாறு பற்றிய நாட்டிய நாடகம் நடைபெற்றது. இதற்கு வைகோ தலைமை தாங்கி நாடகத்தை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் வைகோ உரையாற்றுகையில்,

இலங்கை தமிழர்கள் தங்கள் குழந்தைகளுடன் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டனர். அந்த போருக்கு இலங்கைக்கு இந்தியா பெருமளவு உதவியது. விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுக்கும், வேலுநாச்சியாருக்கும் 19 ஒற்றுமைகள் உள்ளன.

வேலுநாச்சியார் 8 ஆண்டுகளாக தலைமறைவாக வாழ்ந்து, பின்னர் வெள்ளையரிடம் இருந்து சிவகங்கையை மீட்டார்.

அதே போல் பிரபாகரனும் மீண்டும் வருவார். ராஜபக்ச கூட்டத்திடம் இருந்து இலங்கையை மீட்பார். மக்கள் மன்றத்தில் ஒரு கூண்டில் ஈழத்தமிழர்களும், குற்றவாளி கூண்டில் அவர்களை கொல்ல ஏவிய கூட்டமும் நிற்கும். அந்த காலம் விரைவில் வரும்.

இங்கே நடைபெறும் நாடகம் அரசியலுக்கானது அல்ல. வீரம் செறிந்த மண்ணில் வீரத்தாயின் நாடகத்தை நடத்த வேண்டும் என்ற எனது எண்ணம் நிறைவேறி இருக்கிறது. எந்த கூட்டணியில் ம.தி.மு.க. இருந்தாலும், சிறுபான்மை மக்களுக்கு நானும், கட்சியும் பாதுகாவலாக இருப்போம் எனத் தெரிவித்தார்.


Similar posts

Comments are closed.